R.Maheshwary / 2022 ஜூன் 12 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். குமார்
இனந்தெரியாத நபர்களால் இறக்குவானை - டிப்டீன் பாடசாலை கட்டடங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலையிலுள்ள மலசலகூடம் தேசமாக்கப்பட்டுள்ளதுடன், மலசலகூடத்தில் இருந்த மூன்று கதவுகளும் திருடி செல்லப்பட்டுள்ளன.
மேலும் பாடசாலையில் உள்ள ஆசிரியர் விடுதியின் கதவு மற்றும் மின்சார உபகரணங்களும் திருடி செல்லப்பட்டுள்ளன.
குறித்த பாடசாலை மண் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதால்,
பாடசாலை கல்வி நடவடிக்கைகள், கடந்த இரண்டு மாத காலமாக தற்காலிகமாக தோட்ட ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே இனந்தெரியாதவர்களால் பாடசாலை கட்டடம் சேதமாக்கப்பட்டு, பொருள்களும் திருடிச் செல்லப்பட்டுள்ளன.
பாடசாலை விடுமுறையின் பின் கடந்த ஆறாம் திகதி, அதிபர் பாடசாலைக்கு சென்று பார்வையிட்ட போதே, அவ்வாறான சம்பவம் நடைபற்றிருந்ததை கண்டுள்ளார். பின்னர் கோட்டக்ககல்வி அதிகாரியிடம் சம்பவம் தொடர்பில் முறையிட்டதுடன், நிவித்திகல வலயப் பணிமனை ஊடாக பொத்துபிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்கள்.
இதனையடுத்து, பொத்துபிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் பாடசாலைக்கு வருகைத் தந்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
14 minute ago
25 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
25 minute ago
50 minute ago
1 hours ago