2025 ஜூலை 16, புதன்கிழமை

இறம்பொடை நீர்வீழ்ச்சிக்கு சென்ற இருவரை காணவில்லை

Gavitha   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா, இறம்பொடை நீர்வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற இரண்டு பெண்கள், காணாமல் போயுள்ளதாக, கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(13) மாலை இடம்பெற்றுள்ளது.

சிலாபத்திலிருந்து நுவரெலியாவுக்கு, சுற்றுலா சென்றிருந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

சம்பவத்தின் போது, அங்கிருந்த பொதுமக்களால் இரண்டு ஆண்கள் காப்பாற்றப்பட்டதாகவும் எனினும் இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போனவர்களை தேடும் பணிகளை கொத்மலை பொலிஸாரும் கடற்படையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .