R.Maheshwary / 2022 ஏப்ரல் 12 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
கொத்மலை- இறம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற மூவர் காணாமல் போயுள்ளனர் என நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணியாற்றும் 7 பேரைக் கொண்ட குழுவொன்று நேற்று (11) நுவரெலியாவுக்கு வந்துள்ளதுடன், இன்று மாலை 3.30 மணியளவில் வவுனியாவுக்கு திரும்பிச் செல்லும் வழியில் இறம்பொடை நீர்வீழ்ச்சியில் நீராடியுள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் பெய்து வரும் அடை மழையுடன் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்ததால், 7 பேரும் நீரில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.
எனினும் நால்வர் காப்பற்றப்பட்டுள்ளதுடன். மூவரைத் தேடும் பணிகளை பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்துள்ளதாக நுவரெலியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்


9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago