2025 மே 05, திங்கட்கிழமை

இலவச மீன் வழங்குவதில் குழப்பம்

Mayu   / 2024 பெப்ரவரி 22 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபரின் கீழ் இயங்கும் பிரதேசங்களில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சில குடும்பங்களுக்கு இலவசமாக மீன் வழங்கப்பட்டு விற்பனை செய்வதற்கு தேவையான பொருட்களும் வழங்குவதற்கு  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை வியாழக்கிழமை (22) இடம்பெற்றது.

இதன் போது ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் சில குடும்பங்களை தெரிவு செய்யும் நடவடிக்கை அனைத்து பகுதிகளிலும்  சுமூகமான முறையில் இடம் பெற்றது.

இதில் கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் மாத்திரம், சமுர்த்தி உத்தியோகத்தரின் உறவினர் ஒருவரை அழைத்து சென்றமையால்அப்பிரதேசத்தில் வாழும் ஏனைய பொதுமக்கள் குழப்பமான நிலையில் உள்ளனர். 

குறிப்பாக சமுர்த்தி உதவித்தொகை வழங்குவதிலும் இவர் தமக்கு தேவையானவர்களை மாத்திரம் தன்னுடன் இணைத்துக் கொள்வதாகவும் ஏனையோரை புறந்தள்ளி வைப்பதாகவும் இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 எனவே இப்பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகள் தலையிட்டு இவ்வாறான செயற்பாடுகளை நீக்கி அனைவருக்கும் சம உரிமை கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டுமென கோரிக்கையை முன்வைக்கின்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X