2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

இளம் குடும்பஸ்தர் மாரடைப்பில் மரணம்

Freelancer   / 2023 ஜனவரி 15 , பி.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி. பெருமாள்

மஸ்கெலியா - சாமிமலை, கவரவில்லை விளையாட்டுத் திடலில் இளைஞர் ஒருவர் இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் கவரவில்லை தோட்டத்தை சேர்ந்த 2 குழந்தையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சடலம் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் நாளை பிரேத பரிசோதனையின் பின்னர் அவரது சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட உள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .