2025 மே 17, சனிக்கிழமை

இளைஞன் சடலமாக மீட்பு

Freelancer   / 2022 நவம்பர் 30 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

நண்பர் ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக நோட்டன்- அபடீன் நீர்வீழ்ச்சிக்கு சென்று காணாமல் போன இளைஞனின் சடலம் செவ்வாய்க்கிழமை (29) காலை மீட்கப்பட்டதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் திங்கட்கிழமை (28)  காணாமல் போயிருந்த நிலையில், நீர்வீழ்ச்சியின் 15அடி ஆழத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் பொகவந்தலாவை- லின்ஸ்ட்ட் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயதான கிருஸ்ணன் வினுசான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கினிகத்தேனை நகரில் வர்த்தக நிலையமொன்றில் கடமையாற்றி வரும் குறித்த இளைஞன் 28ஆம் திகதி நண்பனின் பிறந்தநாளை கொண்டாட அபடீன் நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று, அங்கு நீராடிக் கொண்டிருந்த போதே, நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .