2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உக்கிய மின்சார கம்பங்களால் தோட்ட மக்கள் அச்சத்தில்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 12 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன்

150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் பொகவந்தலாவ- கியூ தோட்ட மக்களின் பயன்பாட்டுக்காக 20 வருடங்களுக்கு முன்பு நாட்டப்பட்ட, 25க்கும் மேற்பட்ட  மர தூண்கள், உக்க நிலையில் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுவதால் மழைக்காலங்களில் இத்தோட்ட மக்கள் பெரும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை மாற்றுவதற்காக மின்சார சபையால், கொங்கிரிட் தூண்கள் கொண்டுவரப்பட்டு, பழுதடைந்த தூண்களுக்குப் பக்கத்தில் இரண்டு வருடங்களுக்கு மின்சார சபை ஊழியர்களால் நாட்டப்பட்ட போதிலும் இதுவரை பழுதடைந்த தூண்களில் இருந்து மின் கம்பிகள் கொங்கிரீட் தூண்களுக்கு மாற்றப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறன.

எனவே, உக்கிய நிலையில் உள்ள மின் கம்பங்களை மாற்றித் தருமாறு இத்தோட்ட மக்கள், மஸ்கெலியா மின்சார சபை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X