R.Maheshwary / 2022 பெப்ரவரி 20 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
வலப்பனை பிரதேச சபைக்கு உட்பட்ட உடபுஸ்ஸலாவை நகரில் நேற்று (19) மாலை ஏழு கடைகள் தீபிடித்து முற்றாக எரிந்துள்ளதாக.உடபுஸ்ஸலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பல வருடகாலமாக இந்த கடைகள் அமைக்கப்பட்டிருந்த இடம் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்ததாகவும், இவ் இடம் தொடர்பாக வழக்குகள் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், வலப்பனை பிரதேச சபைக்கு சொந்தமான இடத்தில், இக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால், குறித்த இடத்தை பிரதேச சபைக்கு வழங்க வேண்டும் என அறிவித்தல் விடுக்கப்பட்டு கடைகள் அமைக்கப்பட்டிருந்த இடங்களை சுற்றி முட்கம்பி வேலிகளையும் பிரதேச சபை அமைத்திருந்தது.
எனினும் இதனையும் மீறி, தற்காலிக கடைகளை அமைத்து தமது நாளாந்த வர்த்தகத்தை குறித்த கடைகளின் உரிமையாளர்கள் முன்னெடுத்து வந்ததுடன், முறையான மின்சார இணைப்பையும் இவர்கள் பெற்றிருந்தனர்.
இந்த நிலையில், தொடர்ந்தும் சர்ச்சையை ஏற்படுத்திருந்த இக்கடைகள் நேற்று (19) மாலை திடீரென தீப்பற்றி எறிந்து முற்றாக எறிந்து நாசமாகியுள்ளதுடன், பாரிய நஷ்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை உடபுஸ்ஸலாவை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
36 minute ago
42 minute ago