2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

உடரட்ட மெனிகேயில் மோதுண்டு ஒருவர் மரணம்

R.Maheshwary   / 2023 பெப்ரவரி 07 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் மோதி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை மற்றும் கொட்டகலை ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் 113ஆவது மைல் கல் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரயிலில் மோதி உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் கொண்டு வரப்பட்டு ஹட்டன் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன், பின்னர் ஹட்டன் பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவித்ததையடுத்து, சடலம் டிக்கோயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பான அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவித்துள்ள ஹட்டன் பொலிஸார், உயிரிழந்தவர் சுமார் 52 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X