R.Maheshwary / 2022 மே 17 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
காலி முகத்திடலில் எந்தவித இன, மத, கட்சி பேதமில்லாமல் ஒன்றிணைந்து, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடத்தப்பட்டுவரும் ஒரு உணர்வுபூர்வமான பேரெழுச்சி போராட்டத்திற்கு மலையக இளைஞர் யுவதிகளும் ஆதரவு வழங்க வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இளைஞர் யுவதிகள் நடத்திய போராட்டத்தால் மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் விலகியுள்ளார். இன்னும் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவில்லை.
ஜனாதிபதி விலகும் வரை தொடர்ந்து நடத்தும் இந்த போராட்டத்திற்கு இன, மத, கட்சி பேதமில்லாமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இனவாதம் மற்றும் மதவாதத்தையும் பேசி மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி, ஆட்சி பீடம் வந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இன, மத,கட்சி பேதமில்லாமல் ஒன்றிணைந்த இளைஞர் யுவதிகளால் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இனவாதம் பேசுபவர்களுக்கு நல்ல பாடத்தினை இளைஞர் யுவதிகள் புகட்டியுள்ளார்கள். எந்த ஒரு நாட்டிலும் இனவாதம், மதவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீண்ட காலம் ஆட்சியில் நிலைத்திருந்ததில்லை. இனவாதத்தையும் மதவாதத்தையும் விதைத்து ஆட்சி நடத்தியதை இன்று இளைஞர்கள் மாத்திரமல்ல அனைத்து மக்களும் புரிந்துக்கொண்டுள்ளார்கள் என்றார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago