2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உதவி செய்ய வந்தவர் வேனுடன் மாயம்

R.Maheshwary   / 2022 ஒக்டோபர் 30 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

கல்முனை பிரதேசத்தில் இருந்து வருகைத் தந்த வேன், கட்டுகஸ்தோட்டை- மாத்தளை சந்தியில் ​செயலிழந்த போது, உதவி செய்ய வந்த நபர் ஒருவர், அந்த வாகனத்தைக் கடத்திச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது என  கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பிரதேசத்திலிருந்து வாடகைக்கு அமர்த்தி வரப்பட்ட குறித்த வேன், கட்டுகஸ்தோட்டை- மாத்தளை சந்தியை அண்மித்த போது வேனின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அருகிலிருந்த நபர் ஒருவர், குறித்த ​வேன் சாரதிக்கு உதவுவதற்காக வந்து, வேன் சாரதியுடன் நட்புடன் உறவாடியுள்ளார். பின்னர் வாகனத்தை தான் இயக்கித் தருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சாரதி வேனிலிருந்து இறங்கியதையடுத்து சந்தேகநகபர் வேனை இயக்கி, மாத்தளை- தம்புளை வீதியில் வேனை ஓட்டிச் சென்றுள்ளதாகவும் சாரதி தெரிவித்துள்ளார்.

இதுவரை அந்த நபர் தொடர்பில் எவ்வித தகவல்களும் தெரியவரவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார், சந்தேகநபரையும் வேனையும் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X