2025 ஜூலை 17, வியாழக்கிழமை

உதவி பொலிஸ் பரிசோதகர் மீதுத் தாக்குதல்

Kogilavani   / 2017 ஒக்டோபர் 31 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

அங்கும்புரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மீது, திங்கட்கிழமை இரவு, இனந்தெரியாதோர் கூரிய ஆயுதத்ததால் தாக்குதலை மேற்கொண்டுள்ளனரென, அங்கும்புரை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த உதவி பொலிஸ் பரிசோதகர், கண்டி போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப்பெற்று வருகின்றாரென, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவத்தில், அலவத்துகொடையை சேர்ந்த மத்தும பண்டார என்பவரே படுகாயமடைந்துள்ளார். இவர், தனது கடமைமுடிந்து திங்கட்கிழமை இரவு வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தபோது, இவ்வாறுத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளாரென தெரியவருகிறது.

தாக்குதலுடன் தொடர்புடையவரென்று கூறப்படும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X