R.Maheshwary / 2022 ஜூன் 09 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமணசிறி குணதிலக
தனமல்வில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதகம கிராமத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரது காதணிகளை பறித்துச் சென்ற சம்பவம் ஒன்று நேற்று (8) பதிவாகியுள்ளது.
தனது வீட்டுக்கு முன்பாக சமரக்கறிகள் மற்றும் உப்பு என்பவற்றை விற்பனை செய்து வரும் குறித்த பெண்ணிடம் நேற்று முன்தினம் மாலை 3.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த நபர் ஒருவர் 5 கிலோகிராம் உப்பு கேட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த நபருக்காக உப்பை நிறுவை செய்துகொண்டிருந்த போது, சந்தேகநபர் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அப்பெண்ணின் காதணிகளை பறித்துச் சென்றுள்ளார்.
இவ்வாறு பறித்துச் செல்லப்பட்ட காதணிகள் 90ஆயிரம் ரூபாய் பெறுமதியானதென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், சந்தேகநபரை கைதுசெய்வதற்கான விசாரணைகளை தனமல்வில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago