Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஓகஸ்ட் 05 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
“முறையான எவ்வித சாத்தியவள ஆய்வு அறிக்கையின்றியும் சூழலியல் தாக்கங்கள் குறித்த மதிப்பாய்வை மேற்கொள்ளாமலும் முன்னைய அரசாங்கம் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்தமையால் அதனை நடைமுறைப்படுத்தும் போது, தொடராக பிரச்சினைகள் எழுவது கவலைக்குரியதாகும்” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும், “இத்திட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே தவறுகள் இடம்பெற்றுவந்துள்ளன. மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு எதிர்காலத்தில் எவ்விதப் பிரச்சினைகளும் ஏற்படாது என்ற உறுதிப்பாட்டுடனேயே இதற்குத் தீர்வை வழங்க நாம் முயற்சித்துவருகிறோம்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
உமா ஓயா திட்டம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நோர்வே நாட்டின் நிபுணர்கள் குழுவினரது இடைக்கால அறிக்கை, நேற்று (04) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது, சுரங்கப்பாதையில் பாரிய நீர் கசிவு இடம்பெறுவதற்கான சாத்தியப்பாடுகளை ஆரம்பக்கட்ட ஆய்வுகள் முன்மதிப்பீடு செய்யவில்லை எனத் தெரிவித்த நிபுணர் குழு, திட்டத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் சுரங்கச் சுவர்களை பலப்படுத்தி பலமான மூலப்பொருட்களைக் கொண்டு முத்திரையிடுவதற்கான இயலுமையைக் கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
சுரங்கச் சுவர்களில் அகழ்வுப் பணி பொருத்தமான இயந்திரங்களைக் கொண்டே மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன், இடைவெளிகளை நிரப்புவதற்காக சாந்து பூசுகின்றபோது எதிர்காலத்தில் எவ்வித நீர் கசிவும் இடம்பெறாது என்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும் நிபுணர் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
சுரங்கத்தில் பாரிய அளவில் நீர் உட்புகுவதை எதிர்கொள்வதற்கு ஒப்பதந்தக்காரர்கள் தயாராக இருக்கவில்லை என்றும், அவர் மேலும் தெரிவித்தார்.
சுரங்கத்தின் எஞ்சிய நான்கரை கிலோ மீற்றர் பகுதி பணிகளை மேற்கொள்ள முன்னர், விசேடமான சாந்து மூலப்பொருட்களையும் இயந்திரங்களையும் பெற்றுக்கொள்வது அவசியமாகும் என்று மேற்படி நிபுணர் குழு ஆலோசனை வழங்கியது.
மேலும், ஒரு சிறந்த முழுமையான ஆரம்பகட்ட ஆய்வு செய்யப்பட்டிருக்குமானால் சுரங்கத்தில் நீர் உட்புகுவதை தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
இதையடுத்து, நீர் கசிவை எப்படி முழுமையாக நிறுத்த முடியும் என்பது பற்றியும் முன்னைய அறிக்கைகளில் நீர் கசிவு கவனத்திற்கொள்ளப்படாமைக்கான காரணங்கள் குறித்தும் ஒரு முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, நிபுணர்களிடம் ஜனாதிபதி வேண்டிக்கொண்டார்.
இதுபோன்ற பாரிய கருத்திட்டங்கள் முறையான ஆய்வுகளின்றி மேற்கொள்ளப்படக்கூடாது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் இத்தகைய தவறுகளை தவிர்ப்பதற்கு உமா ஓய திட்டத்தின் பிரச்சினைகள் பாடமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், மத்திய மாகாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள 22 கிலோ மீற்றர் நீளமான சுரங்கப் பணிகளுக்கு நிபுணத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
13 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
2 hours ago