2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

உயிரை மாய்த்த இராணுவ வீரர்

Janu   / 2025 ஒக்டோபர் 01 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொனராகலை, படல்கும்புரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீகஹமட பகுதியில் இராணுவ வீரர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) அன்று இடம்பெற்றுள்ளது.

 படல்கும்புரை, மீகஹமட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பிரதீப் சதுரங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருக்கு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துமாறு  ஒருவர் அடிக்கடி தொலைபேசி அழைப்புகளை விடுத்த நிலையில் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் மன உளைச்சல் ஏற்பட்டு இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த அவர், தான் வேலை செய்யும் இராணுவ முகாமுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதுடன் முகாமுக்குச் செல்லாததால் அவரை தேடிய போது வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரமொன்றில் இருந்து உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 குறித்த இராணுவ வீரரின்  மனைவி கர்ப்பமாக உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

 இந்த சம்பவம் குறித்து படல்கும்புரை பொலிஸ் அதிகாரி சிந்தக விக்ரமரத்ன விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X