2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உயர் பதவிகளுக்கான வெற்றிடங்கள் அதிகம்

R.Maheshwary   / 2022 நவம்பர் 07 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

இலங்கையில் மந்தபோசனை நிலைமை அதிகரித்துக் காணப்படும் நுவரெலியா மாவட்டத்தின் சுகாதாரத்துறையில் நிர்வாக அதிகாரிகளின் உயர் பதவிகள் பலவற்றில் வெற்றிடங்கள் காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் கீழ் இரண்டு ஆரம்ப வைத்தியசாலைகளும் 26 பிரதேச வைத்தியசாலைகளும்   டிஸ்பென்சரிகள் 12, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் 14உம் நிர்வகிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த அலுவலகத்தின் சுகாதார சேவை பணிப்பாளர் பதவி, நிர்வாக அதிகாரி பதவி, கணக்காய்வு அதிகாரி போன்ற பதவிகளுக்கு தற்காலிக அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகள், மருத்துவ நிறுவனங்களில் கடமையாற்றுபவர்கள் என்றும் இதனால் இந்த அதிகாரிகளின்  வேலைப்பளு அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தில் பிரதி சுகாதார பணிப்பாளர் ஒருவர் இல்லை என்றும் தற்போதைய நிலையின் கீழ் அந்த வெற்றிடத்துக்காகவேனும் நிரந்தரமாக அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுவரெலியா மாவட்ட வைத்தியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .