2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

உற்பத்திச் செலவீனத்தால் விவசாயிகள் விலகினர்

Freelancer   / 2022 நவம்பர் 11 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

மரக்கறிகளை உற்பத்திச் செய்வதற்கான செலவுகள் அதிகரித்துச் செல்வதால், மரக்கறி பயிர்​ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் விவசாயம் செய்வதில் இருந்து விலகியுள்ளனர்.

இதனால், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதுடன் கடுமையான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், சிறிய அளவில் உற்பத்திச் செய்யும் விவசாயிகள், மரக்கறி உற்பத்தி செய்வதில் இருந்து விலகிக்கொண்டுள்ளனர்.

இதனால், மரக்கறிகளின் விலைகள் இன்னுமின்னும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகுமென ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், இரசாய உரத்தின் விலை அதிகரிப்பு மற்றும் வேளாண்மை இரசாயனங்களின் விலை உயர்வு, காலநிலை மாற்றம் ஆகிய காரணங்களில் மரக்கறி உற்பத்தில் நட்டம் ஏற்பட்டுள்ளது.

அதனால், சிறிய உற்பத்தியாளர்கள் மரக்கறிகளை உற்பத்திச் செய்வதை கைவிட்டுள்ளனர் என்றார்.

ஜப்பானின் பசுமை விவசாய தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தினால்  விவசாயியை பலப்படுத்த முடியும் எனவும் ரஷ்யாவில் இருந்து 50 கிலோ கிராம் இரசாயன உரத்தை 10,000 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு வழங்க முடியும் எனவும் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .