2025 மே 17, சனிக்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேண்டும்

R.Maheshwary   / 2023 ஜனவரி 09 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது பிரதிநிதிகளைச் தெரிவுச் செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் நேற்று (8) நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

நாட்டில் பொருளாதார சிக்கல் காணப்பட்டாலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்புவதற்கு கட்டாயமாக தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என தெரிவித்த அவர், நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமது கட்சியின் பிரதிநிதிகள் களமிறங்கவுள்ளனர் என்றும் தற்போது வேட்புமனும“ தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என்றார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட்டால், ஐக்கிய மக்கள் சக்தி பாரியை வெற்றியை ஈட்டும். அதேவேளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வீழ்ச்சியடையும் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .