Freelancer / 2022 நவம்பர் 10 , மு.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கே. குமார்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே உள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு செப்டெம்பர் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டரீதியான அதிகாரங்கள் இருக்கின்றன என்றார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில், அண்மையில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் எதிர்வரும் 2023 மார்ச் 20ஆம் திகதியுடன் முடிவடையும் எனவும், அதில் ஒரு வருட கால நீடிப்பும் உள்ளடங்குவதாகவும் சுட்டிக்காட்டிய தவிசாளர், தேர்தல் இருந்தால் முறையாக தேர்தலை நடத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பாகும்.
அதில், சட்ட சிக்கல்கள் எவையும் இல்லை என்றார். உள்ளுராட்சி மன்றங்களில் இதற்கு முன்னர் 4,917 உறுப்பினர்களாக இருந்த போதிலும் தற்போதைய முறையில் 8,911 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அந்த எண்ணிக்கையை குறைப்பதற்கும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்றார். R
15 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
2 hours ago
4 hours ago