2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

ஊழியர் நம்பிக்கை நிதியம் இடமாற்றம்; பயனாளர்கள் அவதி

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்   

ஹட்டன் நகரில் இயங்கிவரும் ஊழியர் நம்பிக்கை நிதியக் காரியாலயம் மூடப்படவுள்ளதுடன், அக்காரியாலயம் நுவரெலியாவுக்கு இடமாற்றப்படவுள்ளதால், தாம் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுமென்று, பயனாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.   

20 நகரங்களை உள்ளடக்கிய சுமார் 2,687 தோட்டப் பிரிவுகளில், 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.   

இவர்களுல் பெருந்தோட்டத்துறையைச் சார்ந்தோர், தனியார் தோட்டத்தைச் சார்ந்தோர், அரச அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், 20 நகரங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.   

இவர்கள் அனைவரும், ஊழியர் நம்பிக்கை நிதியைப் பெற்றுகொள்ளுதல் மற்றும் ஏனைய தேவைகளுக்காக, ஹட்டன் நகரில் இயங்கிவரும் ஊழியர் நம்பிக்கை நிதியக் காரியாலயத்தையே, இதுவரை பயன்படுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில், இந்நிலையமானது எதிர்வரும் 5ஆம் திகதியுடன், நுவரெலியாவுக்கு இடமாற்றப்படவுள்ளதால், தாம் பெரிதும் பாதிப்படைய நேரிடுமென்று, பயனாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.   

எனவே, இவ்விடயம் தொடர்பாக,  சம்பந்தப்பட்ட அமைச்சு, உடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு, இக்காரியாலயத்தை தொடர்ந்து, ஹட்டனில் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .