2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

ஊவாவில் வழங்கப்பட்ட நியமனங்கள் ஒரே நாளில் இரத்து

R.Maheshwary   / 2023 ஜனவரி 05 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமணசிறி குணதிலக

கல்வி நிர்வாக சேவையின் அதிகாரிகள் குழு ஓய்வு பெற்றதையடுத்து, ஊவா மாகாண கல்வி அமைச்சின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் நியமனங்கள் மறுநாளே இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் ஊவா மாகாண கல்வி திணைக்களம் மற்றும் வலய அலுவலகங்களில் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் 30/12/2022 ஆம் இலக்க 1/8/1/4 கடிதங்கள் மூலம் 01/01 ஆம் திகதி முதல் ஊவா மாகாண கல்விப் பணிப்பாளராக ரோஹித அமரதாச, மேலதிக கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

அத்துடன்,  J.M. சேனாதீர, தம்மிக் ஹேரத் பதுளை பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகவும்   சரத் ரணசிங்க பசறை பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகவும் சரீனா பேகம் வெலிமடை பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகவும், எஸ். விமலவீர வியலுவ பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகவும் மற்றும் சாரங்கி ஹெட்டியாராச்சி பண்டாரவளை பிராந்தியக் கல்விப் பணிப்பாளராகவும்  நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு வழங்கப்பட்ட நியமனங்கள்  நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஊவா மாகாண பிரதம செயலாளர் பி.பி.விஜேரத்னவிடம் வினவியபோது,

இரண்டு வாரங்களில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டு மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களில் நியமிக்கப்படுவர் என்றார்.

இது தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஊவா மாகாண செயலாளர் பிரியந்த வருஷமான தெரிவிக்கையில்,

ஊவா மாகாணத்தின் கல்வியானது உச்சக்கட்டமாக சீர்குலைந்துள்ளது.இருந்த போதிலும் தகுதியற்றவர்களுக்கு பதவிகளை வழங்குவதற்கு அரசியல் அதிகாரிகள் செயற்பட்டு வருகின்றனர். இவை அனைத்தும் பிள்ளைகளின் கல்வியை பாதிக்கிறது.

அரசியல் அழுத்தத்தின் அடிப்படையிலான பணி நியமனங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்.நேர்முகத் தேர்வின்  மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியானவர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .