2025 மே 19, திங்கட்கிழமை

எதிர்கால அரசியல் செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடல்

R.Maheshwary   / 2022 ஜூலை 31 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ. ரமேஸ்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் எதிர்கால அரசியல் நிலை தொடர்பான சந்திப்பொன்று,  கொட்டகலை சிஎல்எப். கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம்(30)  நடைபெற்றது.

இதில் காங்கிரஸின் பொது செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான்,  பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன், நுவரெலியா மாவட்ட  செயலாளர் நந்தன கலபட உள்ளிட்ட காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பில் காங்கிரஸின் எதிர்கால அரசியல் நடவடிக்கை, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் தோட்டப்பகுதி மக்களுக்கு எதிர்காலத்தில் பெற்றுத்தரக்கூடிய நிவாரண உதவிகள் மற்றும் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கை மலையக தோட்டப்பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் காணப்படும் பிரதேச சபைகளுக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகளில் முன்னெடுக்க வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X