R.Maheshwary / 2023 பெப்ரவரி 08 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத்.எச்.எம்.ஹேவா
எதிர்கால அரசியல் தொடர்பில் சிந்தித்து அரசியலில் இருந்து தான் ஓய்வுப் பெற தீர்மானித்ததாக ஹட்டன்- டிக்கோயா நகர சபையின் தவிசாளர் சடையன் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தான் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அழைப்பின் பேரில்1996ஆம் ஆண்டிலிருந்து அரசியலுக்கு பிரவேசித்தேன். ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தவிசாளராக 2018ஆம் ஆண்டு தெரிவு செய்யப்பட்டேன் என்றார்.
ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனையின் பேரில் இயன்றவரையில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை இப்பிரதேசத்தில் முன்னெடுத்ததுடன் அதற்காக கட்சி பாராமல் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக இரண்டு வருடங்களாக திட்டமிட்டிருந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத காரணத்தினால் எமது சில திட்டங்களை கைவிட வேண்டியிருந்தது.
எவ்வாறாயினும், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் அரசியலில் தொடர்ந்து இருப்பதா இல்லையா? என்பது தொடர்பில் தற்போது சிந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago