Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2018 ஜூலை 31 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலித ஆரியவன்ச
எதிர்ப்புகளுக்கு அஞ்சி, அபிவிருத்தித் திட்டங்களைப் பின்னடையச் செய்ய வேண்டாம் என்று, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.
பதுளை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில், நேற்று (30) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், பதாதைகளை ஏந்திக்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களால், நாட்டின் அபிவிருத்தி பின்னடைந்து செல்வதாகச் சாடியதுடன், இவ்வாறு பதாதைகள் ஏந்துபவர்களைக் கண்டு அஞ்சி, அபிவிருத்தித் திட்டங்களைப் பின்னடையச் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்தார்.
போராட்டங்களைக் கண்டு பயந்தால், முதுகெலும்பில்லாத அரசாங்கம் என்ற பழிச்சொல்லை ஏற்க நேரிடும் என்று எச்சரித்த அவர், நாட்டின் அபிவிருத்தியே தமது இலக்கு என்றும், அதனால், எதைக் கண்டும் தாம் அஞ்சப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை பரிந்துரைத்துள்ள இடங்களில், குப்பை மீள்சுழற்சியை மேற்கொள்ளுமாறு, அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
பதுளை மாநகர் மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் சேகரிக்கப்படுகின்ற குப்பைகள், மீஹகிவுல பிரதேசத்திலேயே மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுவதாகவும், எனினும் மீள்சூழற்சிக்கு எதிராக, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாகவும் தெரிவித்த அவர், இந்த எதிர்ப்புத் தொடர்பில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கும்போதே, இவ்வாறான அறிவுரையை அவர் வழங்கியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்தியைச் சீர்குலைப்பவர்களே, மக்களைத் திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
16 minute ago
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
27 minute ago
40 minute ago