2025 மே 05, திங்கட்கிழமை

எபோட்சிலி தோட்டத்தில் ஒருவருக்கு தொற்று

Gavitha   / 2020 நவம்பர் 24 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். சதீஸ், எம்.கிருஸ்ணா

ஹட்டன், எபோட்சிலி தோட்டத்திலுள்ள இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவருக்கு, கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என, ஹட்டன் – டிக்கோயா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர், கொழும்பு, பம்லபிட்டியில் நாள் சம்பளத்துக்குப் பணியாற்றி வந்துள்ளார் என்றும் கடந்த 22ஆம் திகதி, கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வந்தபோது, கினிகத்தேனை, கலுகொல்ல பொலிஸ் சோதனைச் சாவடியில் வைத்து, இவருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, இவருக்கு தொற்று இருப்பது, இன்று (24) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவருடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்த ஐந்து குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, தொற்றுக்கு உள்ளான இவர், ஹம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல்  நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X