R.Maheshwary / 2022 ஜூன் 05 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
அக்கரப்பத்தனை- ஹோல்புரூக் பகுதியிலுள்ள கடை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக தலவாக்கலை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
இதற்கமைய, 20 லீற்றர் சுப்பர் டீசல் மற்றும் 21 லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோல் என்பன தலவாக்கலை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.
அனுமதிப்பத்திரமின்றி எரிபொருளை விற்பனை செய்தமை மற்றும் கடையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக அக்கரப்பத்தனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
23 minute ago
48 minute ago
1 hours ago