Editorial / 2018 ஜனவரி 30 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ சண்முகநாதன்
“அமைச்சுப் பதவியை வைத்துக்கொண்டு கஞ்சா, குடு விற்பனை செய்தவதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூடத்தில் தெரிவித்துள்ளார். அவரிடம் தகுந்த ஆதாரம் இருக்குமாயின், நிரூபித்துக் காட்ட வேண்டும். அவ்வாறு நிரூபிக்க முடியாவிட்டால், பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்று, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில், ஹட்டன் – டிக்கோயா நகர சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர் டொக்டர் அழகமுத்து நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
“அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவராவார். தேர்தலில் தோல்வி கண்டவரை தேசியப் பட்டியல் மூலம் அமைச்சராக்கியுள்ளார்கள். அப்படிப்பட்ட ஒருவரை, இ.தொ.கா. தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு அழைத்துவந்து பேச வைத்துள்ளது. அவரின் வார்த்தைப் பிரயோகங்கள் கண்டிக்கத் தக்கவை.
“அரசாங்கத்தில் ஓர் அமைச்சராக இருந்துகொண்டு, இன்னுமொரு அமைச்சருக்கு எதிராகப் பகிரங்க மேடையில் அவர், கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். உண்மையிலேயே, அவரிடம் இது தொடர்பான ஆதாரங்கள் இருக்குமாயின், பொலிஸ் நிலையத்தில் முறையிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பொலிஸார் அவரிடம் விசாரணை நடத்தி, உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
16 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago