Kogilavani / 2017 ஜூலை 12 , பி.ப. 01:39 - 0 - {{hitsCtrl.values.hits}}




சிவாணஸ்ரீ
கடந்த மே மாதம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக, முற்றுமுழுதாக சேதமடைந்த, இரத்தினபுரி, எஹலியகொ பிரதேசத்தை, மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை, ஊவா மாகாணசபை மேற்கொண்டு வருகின்றது.
எஹலியகொடை பிரதேசத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்கி 30 பேர் பலியானதுடன், 117 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. 467 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டன. பாடசாலைகள், வீதிகள், விவசாய நிலங்கள், அரச கட்டடங்கள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் சேதமடைந்துள்ள வீதிகள், விவசாய நிலங்கள் என்பவற்றை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்பின் பேரில், ஊவா மாகாண சபை மேற்கொண்டுள்ளது.
ஊவா மாகாண சபையிலுள்ள அனைத்து அமைச்சுகளும், இதற்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளன.
இதற்கமைவாக, எஹலியகொடை பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டம், ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தலைமையிலான குழுவினர்களால்,நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
புனரமைப்புப் பணியில் ஈடுபடுவதற்காக, ஊழியர்கள் எஹலிகொட பிரதேசத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன், தேவையான உபகரணங்கள், வாகனங்கள் என்பனவும் ஊவா மாகாண சபையின் மூலமாக, எஹலியகொட பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
வேலைத்திட்டத்தின் ஆரம்பிப்பு நிகழ்வில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்களான ஜீ.எம்.கருணாபால, சலித்த கருணாரத்ன, நிமால் விஜேநாயக்க உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .