2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஐ.தே.கட்சி நுவரெலியாவில் கட்டுப்பணத்தை செலுத்தியது

R.Maheshwary   / 2023 ஜனவரி 17 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று  (16)  செலுத்தியது.

காலை 10 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் தினேஷ் லங்கா கீகனகே மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர்கள் உள்ளடங்கிய குழு கட்டுப்பணத்தை செலுத்தியது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நுவரெலியா மாநகர சபை மற்றும் நுவரெலியா பிரதேச சபை ஆகிய இரண்டு சபைகளுக்கும் ஜக்கிய மக்கள் சக்தி போட்டியிடவுள்ள நிலையில், இரண்டு சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் தினேஷ் லங்கா கீகனகே தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .