2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒப்பந்த துரோகத்தை மறந்து விட மாட்டோம்

Freelancer   / 2023 மே 20 , பி.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்.

மலையகம் 200 என்பது கடந்த கால வரலாற்றுகளை மாத்திரம் பார்த்து விட்டு ஒப்பாரி வைப்பதாக சிலர் நினைக்கிறார்கள். ஆனால் மலையக மக்களின் வரலாற்றில் இடம் பெற்றவைகளை சொல்ல கேட்டும், உணர்ந்தும் அறிந்தோம்.

நாங்கள் எத்தகைய துன்பங்களை,துயரங்களை தாங்கி எமது மக்களின் முன்னோர்கள் 1823 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்கள். 

இவ்வாறு வந்த நாங்கள் இந்த நாட்டை பொன் விளைக்கும் பூமியாக மாற்றி காட்டிருக்கின்றோம் என்பதை உணரவில்லை என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேஸன் எம்.பி, ஆனால் நாம் மலையகம் 200 வருடத்தை கொண்டாடுகிறோம், கொண்டாடுவோம் எனவும்,இதன் மூலம் ஒளிமயமான எதிர்காலத்திற்காக கனவு காண்கின்றோம் நிச்சயமாக நாம் காணும் கனவு நனவாகும் நாள் வரும் என்றார்.

1948 ஆம் வருடத்திலே வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பொழுது  சுதந்திரம் தந்து விட்டு வெளியேறினர் என ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க அண்மையில் சொன்னார்
ஆனால் நாம் தான் அவர்களுக்கு சுதந்திரம் கொடுத்தோம் அதனால் அவர்கள் தப்பி சென்று விட்டார்கள் அது பழைய கதை.

அன்று நமது நாட்டில்  நம்மவர்களும், அவர்களின் உழைப்பும்  காரணமாக இருந்ததால் ஸ்ரேலிங் பவுன்ஸ் அதிகமாகி அன்னிய செலவாணி இருந்தது.

எங்கள் முன்னோர்கள், தாய்மார்கள்,எங்கள் பெரியவர்கள் எங்கள் மக்கள் உழைப்பின் காரணமாகத்தான் அன்று ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்தப்படியாக நமது நாட்டில் அன்னிய செலவாணி கையிருப்பு இலங்கையில் இருந்தது.

இதன் காரணமாகவே "வீ வோன்ட் சிலோன்" என்று சிங்கபூர் அதிபர் லீ குவைட்,மலேசியா பிரதமர் மாதி மொஹமட்டும் சொன்னார். இவர்களுக்கு முன்மாதிரியாக காட்டியது எங்கள் உழைப்பு.

அப்படியான உழைப்பை காட்டி நமது நாட்டை கட்டியெழுப்பிய  எங்கள் மக்களின் குடியுரிமையை, வாக்குரிமையை  பறித்து அரசியல் அனாதைகளாக்கிவிட்டார்கள்.

இந்த நகட்டில் வாக்கு உரிமை இல்லாமல், குடியுரிமை இல்லாமல் நாங்கள் ஆக்கப்பட்ட போதிலும் நம்மவர்கள் உழைத்து கொண்டே இருந்தார்கள்.

1964 ஆண்டு காலத்தில் அன்றைய இந்திய அரசாங்க பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரியும், இலங்கை பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவும் எங்கள் மக்களை கேட்காமல் உணர்வுகளை மதிக்காது இரு நாட்டவரும் கலந்து பேசி ஒப்பந்தம் செய்து ஆடு மாடுகளை போல எமது மக்களை இந்தியாவுக்கு கடத்தி கொண்டு போனார்கள்.

இது எமது மக்களுக்கு இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கம் செய்த பெரிய துரோகம் இதை மறந்துவிட மாட்டோம்.

அன்று மோசமான கேவலமான ஒப்பந்தம் செய்து இருக்காவிட்டால்,எம்மை கால்நடைகளை போல வழிநடத்தாமல் இருந்திருந்தால் பாராளுமன்றத்திலே மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் படுத்தும் 25 எம்பிகள் இருந்திருப்போம் மாறாக
இன்று ஒன்பது பேர் மாத்திரமே இருக்கின்றோம்.

அரசியல் ரீதியாக பலியெடுக்கப்பட்டு பின்தங்கி அனைத்தையும் சகித்து கொண்டு உழைத்து வாழ்ந்து வாழ்கிறோம்.

அரசியல் தலைமைகள் காரணமாகவும், சிவில் தலமைகள் காரணமாகவும் தோட்ட வரம்பிலேயே மலையக மக்கள் இல்கையில் ஒரு தேசிய இனமாக உயர்ச்சி பெற்று வரமுடியாமல் இருக்கின்றது.

நாம் தோட்ட தொழிலாளி மட்டுமல்லாமல் தொழிலாளி என்ற வரம்பிற்குள் இருந்து வெளியே வந்து  ஒரு தேசிய இனமாக திகழ வேண்டும்.

இலங்கையில் இன்று சிங்கள மக்கள் வடக்கு,கிழக்கு , முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து மலையக தமிழும் சேர்ந்தால் தான் அது முழு இலங்கையாகும்.

மலையக தமிழ் இல்லாவிட்டால் முழு இலங்கையாகிவிடாது. எனவே இலங்கையில் எம்மை தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

எமது மக்கள் பின்தங்கிய மக்களாக, வசதி குறைந்த மக்களாக தோட்ட தொழிலாளர்களாக இருக்கின்றார்கள்.

மலையகம் 200 என்பது வரலாற்றுகளை மாத்திரம் பார்த்து விட்டு ஒப்பாரி வைப்பதாக சிலர் நினைக்கிறார்கள் ஆனால் நாம் கொண்டாடுகிறோம், கொண்டாடுவோம்.

இந்த நிகழ்வின் ஊடாக ஒளிமயமான எதிர்காலத்திற்காக கனவு காண்கின்றோம் நிச்சயமாக நாம் காணும் கனவு நனவாகும் நாள் வரும் என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .