2025 மே 05, திங்கட்கிழமை

ஒருவேளை உணவுக்கே கஸ்டப்படும் மக்கள்

R.Maheshwary   / 2021 மே 31 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அருள்ஷான்

யட்டியந்தோட்டை சுகாதார பிரிவுக்குட்பட்ட யட்டியந்தோட்டை கிராமசேவகர் பிரிவு, கராகொட கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் கடந்த 13 ஆம் திகதியிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இப்பிரதேசங்களிலிருந்து  நகருக்கு வர முடியாமல் இருக்கும்   தொழிலாளர்கள்  பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள்  நகரிலுள்ள வியாபார நிலையங்கள் ஹோட்டல்கள்,  கட்டுமானப் பணிகள், ஓட்டோ செலுத்துதல் போன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள்.

அத்துடன் இம்மக்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் இதுவரை கிடைக்காமையால், இவர்கள் தமது  ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் கஸ்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X