Freelancer / 2022 நவம்பர் 16 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நவி
கண்டி - ஹந்தான பகுதியில் ஒரே இரவில் நான்கு ஆலயங்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு ஐந்தாம் கட்டை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயம், அம்மன் ஆலயம் மேலும் நான்காம் கட்டை பகுதியில் உள்ள அம்மன் ஆலயம், மூன்றாம் கட்டை பகுதியிலும் ராமர் ஆலயத்திலும் திருடர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர்.
இந்த நான்கு ஆலயங்களிலும் உள்ள பெறுமதியான தங்க தாலிக்கொடி மற்றும் உண்டியலில் உள்ள பணம் ஆலயத்தில் இருந்த அரிசி மூட்டைகள் போன்ற பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, பிரதேச மக்கள் மற்றும் ஆலயத் தலைவர்கள் ஒன்றிணைந்து கண்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R


2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago