2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள்

Freelancer   / 2022 நவம்பர் 21 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்.

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற தாய் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் இந்த மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதென வைத்தியசாலையின்  மகப்பேற்று வைத்தியர் தெரிவித்தார்.

இவ்வாறு மூன்று குழந்தைகள் பிரசவித்த தாய்க்கு பத்து மற்றும் எட்டு வயதினை கொண்ட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

 இந்த தாய்க்கு உதவி செய்ய தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் முன் வந்து உதவி கரம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .