2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஒலி அமைப்பு சாதனம் அன்பளிப்பு

Mayu   / 2024 ஜூலை 15 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு தசாப்தத்தை கடந்து பயணிக்கும் நோர்ட்டன் வாசகர் வட்டத்தின் செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கெயார் லங்கா பௌண்டேசன்  அனுசரணையில் ஒலி அமைப்பு ஞாயிற்றுக்கிழமை  (14) அன்பளிப்பு செய்யப்பட்டது.

காசல்றி சமர்ஹவுஸ் ஹோட்டல் மண்டபத்தில் வாசகர் வட்டத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம் ராம்  தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்  கெயார் லங்கா அறக்கட்டளையின் பணிப்பாளர்  அர்ஜுன் ஜெயராஜ், வாசகர் வட்டத்தின் செயலாளரும் அதிபருமாகிய சுகேஸ்வரன், பொருலாளர் தமிழ் செல்வன் ,  ஒட்டரி த.வி அதிபர் மதியழகன், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் காமராஜ் மற்றும் வாசகர் வட்டத்தின் உறுப்பினர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.

கல்வி,  கலை, கலாசார, ஊக்குவிப்பு விடயங்களை ஒரு  தசாப்த காலத்திற்கு மேலாக செய்து வரும் நோர்ட்டன் வாசகர் வட்டத்தின் செயற்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில்  ஒலி அமைப்பு சாதனத்தை தந்துதவிய கெயார் லங்கா அறக்கட்டளையின் பணிப்பாளர் அர்ஜுன் ஜெயராஜ் அவர்களுக்கு வாசகர் வட்டத்தின் சார்பாக நினைவுப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டதுடன், வாசகர் வட்டத்தின் வெளியீடான மலையக ஆளுமை கல்வி வெளியீட்டு திணைக்களத்தின் தமிழ் பிரிவு ஆணையாளர் நாயகம் அமரர் லெனின் மதிவானம் அவர்களின் நினைவுத்தொகுப்பான   " இளமை புலமை இனிமை"   தொகுப்பும்  வழங்கி வைக்கப்பட்டது.

இராமச்சந்திரன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X