Janu / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த அரசாங்கத்தை வீட்டு விரட்டி, புதிய அரசாங்கத்தை அமைக்கும் வரையிலும் இந்நாட்டு மக்கள் ஓரணியில் அணிதிரள்வார்கள் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில், ஜனவரி 30ஆம் திகதியன்று ஆரம்பித்த மாற்றத்துக்கான மக்கள் போராட்டத்தின் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுத் தாக்குதல் மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை வியாழக்கிழமை (01) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“ மக்களின் வாழ்க்கையில், பல்வேறு பிரச்சினைகள் தலைத்தூக்கியுள்ள நமது நாட்டில் சுமார் 60 சதவீத குடும்பங்கள் கடனாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்பதை புள்ளி விபரங்கள் காட்டுக்கின்றன.
இந்நிலையில் நிம்மதியாக வாழ முடியாது, ஒரு வேளை உணவு உண்டு வாழும் நிலைக்கு மக்கள் தள்ளிவிடப்பட்டுள்ளனர்.
இன்று பல்வேறுப்பட்ட வரிச்சுமைகளை மக்கள் மீது அரசாங்கம் ஏற்றியுள்ளது. வற் அதிகரிக்கப்பட்டதன் ஊடாக அன்றாட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இரவோடு இரவாக எரிபொருள் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதனூடாக இந்த அரசாங்கம் மக்களின் வாழ்க்கையை அதல பாதாளத்துக்கு தள்ளிவிட்டுள்ளது என்றார்.
ஏழைகளின் பிரதான உணவாக இருந்த மரக்கறி உணவு செல்வந்தர்களின் உணவாக இன்று மாறியுள்ளது. போக்குவரத்து கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிவாயு மற்றும் மண்ணெண்ணை விலை அதிகரிப்பு காரணமாக வீடுகளில் உணவு சமைத்து உண்ண முடியாத நிலையை அரசாங்கம் ஏற்பட்டுத்தியுள்ளது. மக்களின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை என்றார்.
நாளுக்கு நாள் தொழில் இன்மையும் அதிகரித்து செல்கிறது. இந்த நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு தள்ளிவிட்டுள்ள இந்த அரசாங்கம் நாட்டு மக்களை மேலும் மேலும் கடனாளியாக மாற்றிக்கொண்டு செல்கின்றது.
பொருளாதார தாழ்வு நிலை காரணமாக பெற்றோர்கள் தம் பிள்ளைகளை முறையாக பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். தற்போது நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பாடசாலை இடைவிலகல் பாரிய அளவு அதிகரித்துள்ளன என்றார்.
அதேபோல நாட்டில் மின் கட்டணம் அதிகரிப்பு செய்யப்பட்டதன் காரணமாக 15 சதவீத குடும்பங்கள் இருளில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்த அவர் இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அனைத்து நிபந்தனைகளுக்கும் தலையாட்டி அனைத்து சுமைகளையும் மக்கள் மீது ஏற்றிவிட்டு இப்போது வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கின்றது. ஜனாதிபதி சுபபோக வாழ்கையை வாழ்ந்து வருகிறார் என சாடினார்.
ஆ.ரமேஸ்
10 minute ago
21 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
21 minute ago
37 minute ago