2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கூரைத்தகடுகள் கையளிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியத்தின் கீழ் இருந்த 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கூரைத் தகடுகளை, நுவரெலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கலை, ஸ்டர்ஸ்பி, கவரவில, இன்வெரி, லொயினோல், டெரிக்கிளயார், கரோலினா ஆகிய தோட்டங்களில் வாழும் மக்களின் பாவனைக்காக, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் வைத்து நேற்று (01) தோட்ட நிர்வாகத்திடம் கையளித்தார்.

இந்நிகழ்வில், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம், சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, மனிதவள அபிவிருத்திப் பொறுப்பு நிதியத்தின் தலைவர் புத்திரசிகாமணி, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோரண்ஸ், முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் நகுலேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .