2025 ஜூலை 02, புதன்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்கான 9 பேர் வைத்தியசாலையில்

Kogilavani   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.புஸ்பராஜ், ஆ.ரமேஸ்

லிந்துலை, பேரம் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 9 பெண்கள்; லிந்துலை வைத்தியசாலையில் நேற்று(26) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வழமைப் போன்று தமது பணிக்குச் செல்லும் போது குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களில் 3 பேர் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் 6 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை வைத்தியசாலையில், குளவி கொட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் மருந்துகளை   மருந்தகத்தில் வாங்குமாறு வைத்தியர்கள் துண்டுகள் எழுதி கொடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .