2025 ஜூலை 02, புதன்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்காகி ஐவர் பாதிப்பு

Sudharshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சிவனொளிபாதமலைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்துக்கொண்டிருந்த ஐவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொகுவலை பிரதேசத்தை சேர்ந்த ஐவர் நேற்று (24) பகல் சிவனொளிபாத மலைக்குச் சென்றுள்ளனர். சிவனொளிபாதமலையிலிருந்து  நல்லத்தண்ணி நகரத்தை நோக்கி வந்துக்கொண்டிருந்த போது, கங்குளத்தென்ன சிவப்பு பாலத்துக்கு அருகில் வைத்தே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இவர்களை, நல்லத்தண்ணி பொலிஸார் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .