2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கசிப்பு நிலையம் சுற்றிவளைப்பு ; பொலிஸார் மீது குளவி கொட்டு

Janu   / 2025 மே 18 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹப்புத்தளை, பிடரத்மலே தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள், குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம்  சனிக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த தேயிலைத் தோட்ட மேல் பகுதியில் உள்ள ஒரு நீர்நிலைக்கு அருகில் இரண்டு நபர்களால் கசிப்பு வியாபாரம் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய அவர்கள் அஙகு சென்ற போதே திடீரென குளவி தாக்குதலுக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்கப்பட்ட அதிகாரிகள் ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்,  கசிப்பு தயாரித்த சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை  கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும்  பொலிஸார்  தெரிவித்தனர்.

பாலித ஆரியவன்ச

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X