2025 ஜூலை 12, சனிக்கிழமை

கசிப்பு, கோடாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2017 ஒக்டோபர் 05 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலதி ஆரிவன்ச

ஹாலிஎலவிலுள்ள வீடொன்றில், மிகவும் இரகசியமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த வீட்டின் உரிமையாளரை, ஹாலிஎல பொலிஸார், புதன்கிழமை கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, 5 லீற்றர் கசிப்பு, 4 லீற்றர் கோடா மற்றும் வாயு சிலிண்டர்கள் இரண்டு என்பனவற்றையும், பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து, மேற்படி வீட்டைச் சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்திய பொலிஸார், கசிப்புக் காய்ச்சிக் கொண்டிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளரை கைதுசெய்தனர். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .