2026 ஜனவரி 21, புதன்கிழமை

கடும் காற்றினால் 19 குடியிருப்புகள் சேதம்

Kogilavani   / 2021 மே 26 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சு.சுரேந்திரன்   

மொனராகலை மாவட்டத்தில் நீடித்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை வானிலை காரணமாக, பல்வேறுப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

மொனராகலை  வெல்லவாய பிரதேச செயலாளர் பிரிவில் கடும் காற்று காரணமாக, 19 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன்  வெல்லவாய தனமல்வில பிரதான வீதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வாகனப் போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது.  

வெல்லாய பிரதான வைத்தியசாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக சிகிச்சைக் கூடாரமும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X