2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கடும் பாதுகாப்புக்கு மத்தியில் காஸ் விநியோகிக்கப்பட்டது

R.Maheshwary   / 2022 மே 24 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

லிட்ரோ நிறுவனத்தால் இன்று (24) ஹட்டன் மற்றும் பொகவந்தலாவை நகரில் சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டதுடன், பொலிஸாரின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில்  நுகர்வோருக்கு சமையல் எரிவாயு விநியோகிக்கப்பட்டது.

இதற்கமைய, ஹட்டன் நகருக்கு  400 சிலிண்டர்களும் பொகவந்தலாவை நகருக்கு 350 சிலிண்டர்களும் லிட்ரோ நிறுவனத்தால் அனுப்பி வைக்கப்பட்டன.

எனினும் நுகர்வோரின் கேள்விக்கு அமைய லிட்ரோ நிறுவனத்தால் சமையல் எரிவாயு அனுப்பி வைக்கப்படவில்லை என, விற்பனை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் சில ஹோட்டல்களின் உரிமையாளர்கள் தரகர்களைப் பயன்படுத்தி தேவையற்ற விதத்தில் சமையல் எரிவாயுவை சேகரிப்பதாகவும் இதனால் சாதாரண நுகர்வோருக்கு சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, சமையல் எரிவாயு விநியோகத்தின் போது, நுகர்வோருக்கும் விநியோகஸ்தர்களுக்குமிடையில் பொகவந்தலாவை நகரில் அமைதியின்மை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .