2025 மே 15, வியாழக்கிழமை

கடும் வெப்பத்தால் நீர் மட்டம் குறைவு

Freelancer   / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் கடந்த சில நாட்களாக நிலவிவருகிறது இதனால் நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர்த் தேக்கங்களில் ஒன்றான மவுஸ்சாக்கலை நீர்த் தேக்கதின் நீர் மட்டம் நேற்று (13) மதியம் அதன் கொள்ளளவை விட சுமார் 19 அடி குறைந்த நிலையில் உள்ளது.

இந்த நீர்த் தேக்கம் மூலம் கெனியோன், லக்‌ஷபான பொல்பிட்டிய நவ லக்‌ஷபான ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர் தேக்கம் இது வாகும் என நீர் மின் நிலைய
உயர் அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட 21 அடி குறைந்த நிலையில் உள்ளது எனவும் மேலும் இந்த வரட்சி தொடருமானால் மின் வெட்டு ஏற்படும் அபாயத்தை இலங்கை வாழ் மக்கள் அனுபவிக்க நேரிடும் என அந்த அதிகாரி கூறினார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .