Editorial / 2018 மே 08 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன், சதிஸ், ரஞ்சித ராஜபக்ஸ
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (7) மாலை 6.30 மணியளவில், நோர்வூட் பகுதியில் வைத்தே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது,
நுவரெலியாவிலிருந்து சாமிமிலை வரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் பயணித்த, தனியார் பஸ்ஸை, குறித்த பஸ்ஸிற்கு பின்னால் வந்த, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த தேசிய தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதால், இந்த முறுகல் நிலை ஏற்பட்டு கைகலப்பு வரை சென்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் இருவர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் கமல் அபேசிறி தெரிவித்தார்.
மேலும், தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு, நேற்று (08) ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, மேலும் மூவர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுபற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 minute ago
13 minute ago
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
13 minute ago
33 minute ago
3 hours ago