2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

கட்சி தாவிய பிரதேசசபை உறுப்பினர்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீலமேகம் பிரசாந்த்

இலங்கை தொழிலாளர் ஐக்கிய  முன்னணியின் கொத்மலை பிரதேசபை உறுப்பினர் ஆர்.நகுலேஷ்வரன் , தொழிலாளர் தேசிய சங்கத்தோடு இணைந்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இவர், நேற்று உத்தியோகப்பூர்வமாக தொழிலாளர் தேசிய சங்கத்தோடு இணைந்து கொண்டார்.

 தொழிலாளர் தேசிய சங்கத்தின்  பிரதித்தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராமான எம். உதயகுமாரை சந்தித்து, தன் உத்தியோகபூர்வ இணைவை அறிவித்தார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகின்ற போது, அண்மைகாலமாக இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் மந்தகதியான போக்கே தான் மாற்றுக்கட்சிக்கு செல்வதற்கான காரணமெனவும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X