2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கட்டுபாட்டு விலையை மீறிய முட்டைகள்

R.Maheshwary   / 2022 நவம்பர் 07 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்‌ஷ

முட்டை கட்டுப்பாட்டு விலையை மீறியுள்ளதாக ஹட்டன் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முட்டை நிறம்

வௌ்ளை நிற முட்டையொன்று 54 ரூபாய்க்கும் பழுப்பு நிற முட்டை 55 ரூபாய்க்கும் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முட்டை பண்ணை உரிமையாளர்கள் முட்டையை சில்லறை விலைக்கு மேலதிகமாக தமக்கு விற்பனை செய்வதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

முட்டையின் விலை அதிகரித்துள்ளதால் நுகர்வோர் முட்டையை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஏனைய நாட்களில் தமது வர்த்தக நிலையங்களுக்குத் தேவையான முட்டைகள் முட்டை பண்ணை உரிமையாளர்களால் விநியோகிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமக்கு தேவையான முட்டைகள் கிடைக்காமை காரணமாக முட்டை விற்பனை குறைந்துள்ளது என்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .