Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஜூலை 26 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி நகரில், புதிய போக்குவரத்துக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக, கண்டி பன்முக போக்குவரத்துக் கட்டமைப்பொன்றை நிர்மாணிப்பதற்கே திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் அழுத்தத்துக்கு உள்ளாகும் ரயில் திணைக்களத்தின் கட்டடத் தொகுதியை மறுசீரமைப்பதற்காக, 4 மாடிகள், 5 மாடிகள் கொண்ட இரண்டு கட்டடத்தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
அத்தோடு, ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகை தரும் பக்தர்களுக்காக வாகனத் தரிப்பிடம் ஒன்றும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இவற்றுக்காக 1,460 மில்லியன் ரூபாயை வழங்குவதற்காக, மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .