2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கண்டி மாவட்ட தமிழ் பிரதிநிதித்துவத்துக்கு களங்கம் ஏற்பட இடமளியோம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 12 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

நவி

தமிழ்ப் பிரதிநிதித்துவம் என்பது கண்டி மாவட்ட தமிழ் மக்களின் உயிர்நாடியாகும். அதற்கு துளியளவும் களங்கம் ஏற்படுவதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் நேற்று (11)  நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர். 

 தமிழ்ப் பிரதிநிதித்துவம்  என்பது அது எமது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். எனவே, பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள 'இடைக்கால தடை'யை தமிழ் முற்போக்கு கூட்டணி உடனடியாக மீளப்பெற வேண்டும்.

ஒற்றுமையே பலம் பொருந்திய ஆயுதம்.தமிழ் பேசும் மக்களின் இருப்புக்கான அடித்தளம். அதனை மேலும் பலமாக்கவே பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார். அவர் நடுநிலை வகித்த தீர்மானம்கூட, கூட்டணியின் நன்மை கருதியது.

எனவே, தடம் புரண்ட - மாறிய இடத்தை சீர்செய்துகொண்டு முன்னோக்கி பயணித்தால் மட்டுமே இலக்கை நோக்கி நகர முடியும். அதனைவிடுத்து அவருக்கு எதிராக சேறுபூசும்  பரப்புரைகளை முன்னெடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், கண்டிக்கத்தக்கது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .