Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 பெப்ரவரி 14 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
கண்டி மாவட்டத்தில் மஞ்சள் உற்பத்தி செய்த விவசாயிகள் தமது அறுவடயை உரிய விலைக்கு சந்தை படுத்த முடியாமல் தவிப்பதாக கவலை தெரிவித்தனர்.
கண்டி மாவட்டத்தில 500 ஏக்கர்களுக்கும் அதிகமாக மஞ்சள் இம் முறை நடுகை செய்துள்ளதாகவும் அதன் மூலம் கிடைத்த அறுவடையை ஒரு கிலோ கிராம் 50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய முடியாதுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கண்டி மாவட்டத்தின் விவசாயிகள் வங்கிளில் கடன் பெற்று இம்முறை விவசாயத்தில் ஈடுபட்ட போதும் தற்போது தமது அறுவடையை விற்பனை செய்துகொள்ள முடியவில்லை.
இதனால், வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதானவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமது மஞ்சள் உற்பத்தியை சில விவசாயிகள் அறுவடை செய்து வீடுகளில் வைத்து கொண்டுள்ளதாகவும் மேலும் சில விவசாயிகள் தமது உற்பத்தியை அறுவடை செய்யாமல் உள்ளதாகவும் அவர்கள் மேலும்தெரிவித்தனர்.
தமது மஞ்சள் உற்பத்தியை தகுந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் உதவாவிட்டால் எதிர்வரும் காலங்களில் மஞ்சள் உற்பத்தியில் ஈடு பட போவதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
29 minute ago