2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

கண்டியில் ஹோட்டல் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 ஜூன் 09 , மு.ப. 09:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹ்ன் செனவிரத்ன

வெளிநாடுகளில் இலங்கை மீது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையை நீக்குவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என தெரிவித்து, கண்டி நகரில் நேற்று (8) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஹோட்டல் பணியாளர்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

கண்டி, நுவரெலியா, மாத்தளை உள்ளிட்ட பிரதான நகரங்களின் 18 பிரபல ஹோட்டல்களின் முகாமையாளர்கள் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் பணியாளராக கடமையாற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தற்போது இலங்கை மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான நெருக்கடி தீர்க்கப்பட்டுள்ளதால் ரஷ்யர்கள் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டும் என ரஷ்யப் பிரஜைகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 3 இலட்சத்துக்கு அதிகமானவர்கள் சுற்றலாத் துறையில் நேரடியாக அல்லது பகுதியளவில் வருமானத்தைப் பெற்று வருவதாகவும் தற்போது அவர்களின் வருமானம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிட்டு அதிக சுற்றலாப் பயணிகளை நாட்டுக்கு வரவைழைப்பதற்கான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X